கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,670-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 0.80 குறைந்து ஒரு கிராம் ரூ.58.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.