இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விசாரனைக்கு ஆஜராகியுள்ளார்.
இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் படி இயக்குனர் ஷங்கரிடம் விபத்து நிகழ்ந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் விபத்து நிகழ்ந்தபோது யாரெல்லாம் அங்கு இருந்தார்கள் இந்த விபத்துக்கான காரணம் யார் ? யாருடைய ஜாக்கிரதை காரணமாக விபத்து நடைபெற்றது விசாரித்தனர். இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் தற்போது ஆஜராகியுள்ளார்.