முறை தவறிய உறவுகளால் விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் கணவரால் விவாகரத்து பெற்ற மனைவி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தன்னுடைய கணவர் தனக்கு ஜீவானாம்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த பெண்மணிக்கு திருமணம் முடிந்த பிறகு வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்ததால் தான் அவருடைய கணவர் விவாகரத்து பெற்றுள்ளார்.
இப்படி முறை தவறிய உறவில் இருக்கும் மனைவி விவாகரத்து வாங்கிய கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி முறை தவறிய காதலால் நடைபெறும் விவாகரத்துகளுக்கு கணவர் ஜீவானாம்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.