இந்திய திரைப்பட நடிகையான காஜல் அகர்வால் 2004ஆம் ஆண்டில் ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டில் இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008 ஆம் ஆண்டில் இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. இந்நிலையில், 2009ஆம் ஆண்டில் இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.
இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு (2010), பிருந்தாவனம் (2010), மிட்டர். பெருபெட்டு (2011), பிசினசு மேன் (2012), ஜில்லா போன்ற படங்கள் வெற்றி படமாக அமைந்தது. இதனை அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இருந்தாலும் காஜல் அகர்வாலின் அழகும், ஸ்டைலும் இன்னும் குறையவே இல்லை. தற்போது காஜல் அகர்வால் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.