ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, பர்ஹானா போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் சாம்ராஜ் சக்கரவர்த்தி இயக்கத்தில் ”மாணிக்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா, சம்யுக்தா சண்முகநாதன், சாய் ஜனனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் திரில்லர் ஜானரில் இந்த படம் தயாராகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.