Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உப்பு விலை உயர வாய்ப்பு”… தூத்துக்குடியில் பெய்த மழையால் உற்பத்தி பாதிப்பு..!!!!!

தூத்துக்குடியில் மழை பாதிப்பால் உப்பு விலை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கரில் உப்பளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு 30,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். தூத்துக்குடியில் வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது.

உப்பு உற்பத்தி செய்வதற்கான உச்சகட்ட சீசன் காலங்களாக ஜூலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் அவ்வபோதும் மழை பெய்தாலும், மேல்திசை காற்று சரிவர வீசாதாலும் உப்பு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி இருப்பதால் இந்த வருடத்திற்கான உப்பு உற்பத்தி சீசன் நிறைவுடைந்திருக்கின்றது.

இதை அடுத்து உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உப்பு குவியல்களை பிளாஸ்டிக் தர்பாய்கள், தென்னங்கீற்றாலும் உற்பத்தியாளர்கள் பாதுகாப்பாக மூடி வைத்திருக்கின்றார்கள். தூத்துக்குடியில் 15 லட்சம் டன் அளவிற்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டதில் சுமார் 9 லட்சம் டன் உப்பு விற்பனையாகியுள்ளது. இதில் 6 லட்சம் டன் அளவிற்கு உப்பளங்களில் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த உப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை போதுமானதாக இருக்கும். தற்போது ஒரு டன் உப்பு 3000 வரை விற்பனையாகின்றது. மழை நன்கு பெய்ய ஆரம்பித்து இருப்பதால் உப்பின் தேவையை பொருத்து விலை உயர வாய்ப்பு இருப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றார்கள்.

Categories

Tech |