‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டின் 18 நபர்கள் உள்ளனர். இந்நிலையில். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஒரு பிளேட்டை கழுவ முடியாதவங்க எப்படி ஒரு விஷயத்தை முன்னோக்கி போவாங்க என ராமிடம் ஏடிகே கூறுகிறார். இதனை கமல்ஹாசன் கண்டிப்பாக கேட்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.