கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பிரபல நாடு முதலிடம் பிடித்துள்ளது.
நமது இந்திய நாட்டிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷியாவில் இருந்து 2.4 சதவீதம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 8 லட்சத்து 52 ஆயிரத்து 950 பேரல்களாக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்ததில் ஈராக் முதலிடத்தையும், சவுதி அரேபியா இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இந்த நிலையில் அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஈராக் 20.5 சதவீதமும், சவுதி அரேபியா 16 சதவீதமும் நாடுகளின் பங்களிப்பை ரஷியா முந்தியுள்ளது. மேலும் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் ரஷியாவிற்கு முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அக்டோபர் மாதம் ரஷியாவில் இருந்து இந்தியாவுக்கு கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு ஒரு நாளைக்கு 9 லட்சத்து 46 ஆயிரம் பீப்பாய்களாக உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு 1 சதவீதம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.