தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 32 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக படைத்த இயக்கியுள்ளார். இந்த படத்தின் 2 பாகங்களும் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், சரத்குமார், பிரகாஷ்ராஜ், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் உலக அளவில் 450 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்ததாக சமீபத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது உலக அளவில் 500 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலக அளவில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி வசூலை கடந்த நிலையில், 2-வது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.