Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காதல் தோல்வி தான் காரணமா…? கல்லூரி பேராசிரியரின் விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுரம் ரயில்வே கேட் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கல்லூரி பேராசிரியரான செல்லதுரை(28) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த செல்லதுரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லதுரையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் செல்லதுரைக்கும் அவர் வேலை பார்த்த கல்லூரியில் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அந்த பெண் செல்லதுரையுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் அந்த பெண்ணை மறக்க முடியாமல் செல்லதுரை மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி ஏற்கனவே மூன்று முறை தற்கொலைக்கு முயன்றார். எனவே காதல் தோல்வியால் செல்லதுரை தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |