Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் 61 போலீஸ் ஏட்டுகளுக்கு பதவி உயர்வு”…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வாழ்த்து…!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 61 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற 1997 ஆம் வருடம் அக்டோபர் 31 ஆம் தேதி அன்று தமிழக போலீஸ் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து 25 வருடங்கள் நிறைவு செய்தவர்களுக்கு தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கின்றது.

இதன்படி நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் உத்தரவின் பேரில் 61 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கான ஆணையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கி, சிறப்பாக பணியாற்றுமாறு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Categories

Tech |