இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் ரேஷன் அட்டை வைத்துள்ள பலரும் தவறாக அதை பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தகுதி உள்ள பலருக்கு ரேஷன் உதவிகள் கிடைக்காமல் போகிறது.எனவே தகுதி இல்லாதவர்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி தகுதி இல்லாதவர்களின் பெயர் பட்டியலில் தயாரிக்கப்பட்ட அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
2013 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை மொத்தம் 4.74 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் கண்காணிப்பில் உள்ளது.இந்த ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி இல்லாத பட்சத்தில் அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும். ஆப்ரேஷன் எல்லோ என்ற பெயரில் தகுதி இல்லாத மற்றும் மோசடி செய்யப்பட்ட ரேஷன் கார்டுகளை கேரள மாநில அரசு ரத்து செய்து வருகின்றது. அதேசமயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.