டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்க காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில் வெள்ளியில் காற்று தரத்தின் மோசத்தை தடுக்கும் விதமாக கமர்சியல் டீசல் வாகனங்கள் எதையும் பெருநகர டெல்லிக்குள் நுழைய விட வேண்டாம் என காற்று தர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை அமல்படுத்தலாமா வேண்டாமா என்பதை டெல்லி அரசுதான் முடிவு செய்யும்.இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.