தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இனிவரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களின் கருதி சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் கனமழை எதிரொலியாக தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர்,திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.