Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இந்த விதைகளை” விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை….. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…….!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் பண்ருட்டி வட்டார பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகள் குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து பணிக்கன்குப்பம் பகுதியில் 32 முந்திரி உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட பண்ருட்டி முந்திரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது நிறுவனத்தின் முத்திரை மற்றும் பேக்கிங் செய்யும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து அரசு விதை உரிமம் பெற்ற, தனியார் விதை விற்பனை நிலையங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது விதை விற்பனை செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவாக கூறி, காலாவதியான விதைகளை விற்பனை செய்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் உரிமம் பெறாமல் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அப்போது பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |