இந்தியாவில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடங்கள் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள புகார்கள் எழுந்தது. இதில் குறிப்பாக கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அமித் அகர்வாலின் பெயர் அடிபட்டது. இவர் மேற்கு வங்காளம், ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் ராணுவத்திற்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து அதில் வீடுகளை கட்டி விற்பனை செய்ததாக கூறப்பட்டது.
அதோடு பண மோசடி செய்ததாகவும் புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருவதால் முக்கியமான ஆவணங்கள் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.