கர்நாடக மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த மூத்த எம்எல்ஏ ஜி.எச். திப்பாரெட்டி. இவர் காவல் நிலையத்தில் திடீரென்று ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 31-ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் எனக்கு நிர்வாண வீடியோ கால் செய்ததோடு மோசமான வீடியோவையும் அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ ஜி.எச். திப்பாரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, முதலில் எனக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ கால் வந்த போது அந்த பெண்மணி என்னுடைய கேள்விகளுக்கு எதுவும் பதில் அளிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அந்தப் பெண் தன்னுடைய ஆடைகளை கழற்ற ஆரம்பித்தார். இதனால் நான் பதற்றமடைந்து போனை ஆஃப் செய்து ஓரமாக வைத்து விட்டேன். அதன்பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் வந்த போது என்னுடைய மனைவியிடம் போனை கொடுத்தேன். அப்போது அந்தப் பெண் நிர்வாணமாக தோன்றியுள்ளார். இதனால் என்னுடைய மனைவி நம்பரை பிளாக் செய்து விட்டார் என்று கூறியுள்ளார். மேலும் எம்எல்ஏ ஒருவருக்கு நிர்வாண வீடியோ கால் வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.