Categories
தேசிய செய்திகள்

“கேரள தங்கக் கடத்தல் வழக்கு”… அவர் மீதான புகாரில் நான் தலையிடுவேன்!… ஆளுநா் ஆரிஃப் முகமது கான் எச்சரிக்கை….!!!!

மாநில பல்கலைகளில் ஆா்.எஸ்.எஸ் கொள்கைகளைத் திணிப்பதற்கு ஆளுநா் ஆரிப் முகமதுகான் முயற்சி செய்து வருகிறாா் என கேரளத்தில் ஆட்சியிலுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி குற்றம்சாட்டியது. இதற்கு மறுப்பு தெரிவித்து ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது  “பல்கலைக்கழகங்களில் ஆா்எஸ்எஸ்-காரா்களை நியமிக்க நான் முயல்வதாக குற்றம் சாட்டுகிறாா்கள்.

அவ்வாறு நான் நியமித்த ஒருவரை காண்பித்தாலும் நான் ராஜிநாமா செய்யத் தயாா். இதனை நிரூபிக்கவில்லை எனில் முதல்வா் ராஜிநாமா செய்யத் தயாரா..? என்று கேள்வி எழுப்பினர். அத்துடன் தங்கக்கடத்தல் வழக்கில் நான் இதுவரையிலும் தலையிடவில்லை. எனினும் தற்போது முதல்வா் அலுவலகத்தின் நடவடிக்கைகளும், முதல்வருக்கு நெருங்கியவா்களுக்கும் இதில் தொடா்புள்ளதாக புத்தங்களில் எழுதப்படுவதால், இவ்விவகாரத்தில் நான் தலையிடுவதற்கு போதிய அடிப்படை காரணங்கள் உள்ளது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வா் பினராயி விஜயன் மீதான புகாரில் தலையிடுவேன் என்று ஆளுநா் ஆரிஃப் முகமது கான் எச்சரித்து இருக்கிறார். அத்துடன் மாநிலவாதத்தை தூண்டி பிரச்னையை ஏற்படுத்தும் அடிப்படையில் பேசிய மாநில நிதி அமைச்சா் கே.என். கோபாலன் மீது அரசியலமைப்புச் சட்டப்படி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள கோரியது சரியானது தான் என்றும் அவா் உறுதியாகத் தெரிவித்துள்ளாா்.

Categories

Tech |