Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பிரதமர் மோடியை இன்று முதல் முறையாக சந்திக்கிறார் அரவிந்த் கேஜரிவால். வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை குறித்து இரு தலைவர்களும் இந்த சந்திப்பின் போது பேசி வருகின்றனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அறையில் இந்த சந்திப்பு 11 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து டெல்லி வன்முறை குறித்து பேசிய நிலையில், இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யும் பணியில் டெல்லி அரசு ஈடுபட்டு வரும் நிலையில் இன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடைபெறுகிறது. மேலும் இந்த சந்திப்பில் கொரோனோ வைரஸ் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |