Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆண்ட்ரியாவின் ‌”அனல் மேலே பனித்துளி”…. அசத்தலான டிரைலர் வீடியோ வெளியீடு…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் ரிலீசான புஷ்பா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை கைசர் ஆனந்து இயக்க, இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவானது தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |