உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் வருகிற 20ஆம் தேதி கத்தார் நாட்டில் தொடங்க உள்ளது. 32 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்த கால்பந்து தொடர் 28 தினங்கள் ஆசியாவிலுள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த உலகக்கோப்பை தொடரில் 32 அணிகள் கலந்துகொள்ளும் நிலையில், மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறயிருக்கிறது.
இந்நிலையில் ஃபிபா உலகக்கோப்பை தொடரில் பாலின விகிதத்தை சமநிலைபடுத்தும் முயற்சியில் பெண் நடுவர்களை களமிறக்க ஃபிபா முயற்சிசெய்துள்ளது. அதன்படி 2022 உலகக்கோப்பையில் 6 பெண் நடுவர்கள் இடம்பெறுவார்கள் எனவும் அவர்களில் 3 பேர் உதவிநடுவர்களாக இருப்பார்கள் எனவும் ஃபிபா தெரிவித்துள்ளது. அத்துடன் இது ஒரு பெரிய சர்வதேச விளையாட்டில் முதல்முறையாகும் என்று ஃபிபா தெரிவித்து இருக்கிறது.
உலகக்கோப்பையில் நடுவராக கலந்துகொள்ளும் பெண் நடுவர்களின் பட்டியல் :
# ஸ்டீபனி ஃப்ராபார்ட்: பிரான்ஸ்-நடுவர்
# சலிமா முகன்சங்கா: ருவாண்டா-நடுவர்
# யோஷிமி யமஷிதா: ஜப்பான்-நடுவர்
# நியூசா பின்: பிரேசில்-உதவி நடுவர்
# கரேன் டயஸ் மதீனா: மெக்சிகோ-உதவி நடுவர்
# கேத்ரின் நெஸ்பிட்: அமெரிக்கா-உதவி நடுவர்