Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“எங்களை அசிங்கப்படுத்தி விட்டாய்” கடன் கொடுத்தவரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகவுண்டன்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புரசம்பட்டி நாயக்கர் தெருவில் வசிக்கும் சக்திவேல் என்பவர் வெளிநாடு செல்வதாக கூறி கருப்பசாமியிடம் 2 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருப்பசாமி சக்திவேலின் வீட்டிற்கு சென்று பணத்தை திரும்ப கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.

இதனையடுத்து கள்ளை மெயின் ரோட்டில் கருப்பசாமி நின்று கொண்டிருந்த போது, பணம் கேட்டு வீட்டிற்கு வந்து என்னையும், எனது மனைவியையும் அசிங்கப்படுத்தி விட்டாய் எனக்கூறி சக்திவேல் கருப்பசாமியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த கருப்பசாமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |