Categories
உலக செய்திகள்

சூப்பர்!!…. இவ்வளவு சன்மானமா?…. இதை நீங்கள் கண்டிப்பாக பண்ணனும்…. அசத்தும் பிரபல நாட்டு போலீசார்….!!!!

குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு பரிசளிக்கப்படும் என பிரபல நாட்டு போலீசார் கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில்  உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாங்கட்டி   என்ற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் கடந்த 2018 -ஆம் ஆண்டு தனது நாயுடன் நடை பயிற்சி சென்ற டோயா  கார்டிங்லி  என்ற 24 வயதுடைய பெண் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொலையை  இன்னிஸ்பெயில் என்ற  இடத்தில் ஆண் நர்சாக வேலை செய்யும் ராஜ்விந்தர் சிங் என்பவர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் கொலை நடந்த மறுநாளில் இந்தியாவுக்கு தப்பிவிட்டார்.   இந்நிலையில்  அவரை கடந்த 4  ஆண்டுகளாக ஆஸ்திரேலிய போலீசார்  தேடுகின்றனர்.

ஆனால் இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அவரை கைது செய்ய  உதவுவர்களுக்கு ஒரு மில்லியன்  டாலர் பரிசு கொடுப்பதாக  போலீசார் அறிவித்துள்ளனர். மேலும் இது குறித்த தகவல் அளிக்க போலீசார் ஒரு வாட்ஸ் அப் இணைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் 911141220972 என்ற என்னை தொடர்பு கொண்டும் தகவல்  அளிக்கலாம்  எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |