உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் எலான் மஸ்க் சமீபத்தில் twitter நிறுவனத்தை வாங்கினார். அதன் பிறகு twitter நிறுவனத்தின் சிஇஓ மற்றும் சில முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்து மஸ்க் அதிரடி காட்டினார். அதன்பிறகு டுவிட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாத கட்டணமாக 680 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால் மஸ்க் புகார் தெரிவிப்பவர்களுக்கும் மாத கட்டணம் 680 ரூபாய் வசூலிக்கப்படும் என்று கூறினார். அதோடு டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் 3800 ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்கம் செய்யப் போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இப்படிமஸ்க் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது இந்தியாவில் உள்ள twitter வாடிக்கையாளர்களுக்கு புதிய பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது இன்று காலை முதல் டுவிட்டரை லாகின் செய்ய முடியாமல் பல வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆனால் மீண்டும் முயற்சி செய்யவும் என்று டுவிட்டரில் இருந்து ஒரு மெசேஜ் மட்டுமே வருகிறது. அப்படி முயற்சி செய்தால் கூட டுவிட்டரை லாகின் செய்ய முடியவில்லை என்பதே வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. மேலும் இந்த பிரச்சனை எப்போது சரியாகும் என்று பல வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.