செங்கோட்டை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2000-ஆம் ஆண்டு செங்கோட்டையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகமது ஆரிப் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2005-ஆம் ஆண்டு அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அந்த உத்தரவை கடந்த 2007-ஆம் ஆண்டு டெல்லி ஐகோர்ட் உறுதி செய்தது. இதனை தொடர்ந்து முகமது ஆரிப் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கோர்ட் 2011- ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் அவர் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது. இந்த வழக்கை பரிசீலிக்கும் போது மனுதாரரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.