வேலூர் மாவட்டத்தில் கழிஞ்சூர் கிராமத்தில் இ.பி.காலனிக்கு செல்லும் வழியில் ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடத்தில் இருந்த கடைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு காலி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கிருந்த கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்டுள்ளது.
இதனால் தற்போது அந்த இடம் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த இடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் பாழடைந்த கட்டிடத்தை இடிக்க காட்பாடி தாசில்தாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் இன்று அந்த கட்டிடம் தாசில்தார் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது.