Categories
சினிமா தமிழ் சினிமா

வசூலில் பட்டையை கிளப்பும் “காந்தாரா”…. ரூ. 16 கோடி பட்ஜெட்டுக்கு கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா….? வியப்பில் திரையுலகம்….!!!!!

கன்னட சினிமாவில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காந்தாரா திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவரக்கூடிய விதத்தில் இருக்கிறது.

இதனால் காந்தாரா திரைப்படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் காந்தாரா திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 305 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் 350 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் 305 கோடி வரை வசூல் சாதனை புரிந்திருப்பது ஒட்டுமொத்த திரை உலகையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

Categories

Tech |