Categories
உலக செய்திகள்

வீடு புகுந்த மர்ம நபர்கள்…. சுத்தியலால் தாக்கப்பட்ட சபாநாயகரின் கணவர்…. தற்போதைய நிலை என்ன….?

பால் பெலோசி, மருத்துவமனையில் இருந்து அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு, தைவானுக்கு பயணம் செய்து, சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானவர். நான்சி பெலோசியின் வீடு, சான் பிரான்சிஸ்கோவிலுள்ளது. கடந்த மாதம் 28-ஆம் தேதி அன்று காலையில், அந்த வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் கை, கால்கள், தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த போது, நான்சி பெலோசி, வீட்டில் இல்லை. இதனை தொடர்ந்து காயமடைந்த பால் பெலோசி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 82 வயதான பால் பெலோசி, ஜுக்கர்பெர்க் சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட பால் பெலோசி, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 42 வயதான டேவிட் டிபேப் என்பவர், பெலோசியின் சான் பிரான்சிஸ்கோ வீட்டிற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் சபாநாயகரின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் தாக்கினார். அவர் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய அந்த நபர் மீது தாக்குதல் மற்றும் கடத்தல் முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதிக்கான போட்டியில், துணை ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக சபாநாயகர் நான்சி பெலோசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |