இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் ஷிகர் தவான் தலைமை தாங்குவார் என்று பஞ்சாப் கிங்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. இதனை பஞ்சாப் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், தவான் மகிழ்ச்சியுடன், நன்றியுடன், பஞ்சாப் கிங்ஸை வழிநடத்தத் தயாராக இருக்கிறார் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற உரிமையாளரின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த சீசனில் அணியை வழிநடத்திய மயங்க் அகர்வாலுக்கு பதிலாக அவர் களமிறங்குவார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐபிஎல் ப்ளே-ஆஃப்களுக்கு அணியை அழைத்துச் செல்வதில் மயங்க் அகர்வால் தோல்வியடைந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டது.
கே.எல்.ராகுல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற முடிவு செய்த பிறகு, 2022 ஆம் ஆண்டுக்கான கேப்டனாக அகர்வால் நியமிக்கப்பட்டார். பஞ்சாப் கிங்ஸின் போராட்டங்களைத் தவிர, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐபிஎல் சீசனில் 16.33 சராசரியில் 196 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஃபார்மில் சொதப்பி இருந்தார் மயங்க்.. கடந்த ஆண்டும் தவானை கேப்டனாக மாற்றுவது பற்றி உரிமையானது யோசித்திருந்தது, ஆனால் அகர்வாலை வைத்தே சீசன் முழுவதும் ஆடியது.
2022 மெகா ஏலத்தில் தவானை பஞ்சாப் கிங்ஸ் நிறுவனம் ரூ.8.25 கோடி செலுத்தி வாங்கியது. மூத்த பேட்டர் தவான் 14 ஆட்டங்களில் 38.33 சராசரியில் 460 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். தவானுக்கு ஐபிஎல்லில் வீரர் மற்றும் கேப்டனாக அனைத்து அனுபவமும் உள்ளது, மேலும் கடந்த ஆண்டு தனது முதல் சீசனில் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்” என்று ஐபிஎல் வட்டாரம் பிடிஐயிடம் தெரிவித்துள்ளது.
தவான் ஐபிஎல் தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், தற்போது இந்திய அணிக்காக 50 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார், மேலும் இந்த மாத இறுதியில் நியூசிலாந்தில் அணியை வழிநடத்த இருக்கிறார். ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தலைமை வகித்த அனுபவம் உள்ளவர்.
தலைமைப் பொறுப்புகளை தவானிடம் ஒப்படைத்தாலும், மினி ஏலத்தில் அகர்வாலைத் தக்கவைத்துக் கொள்வதில் உரிமையானது ஆர்வமாக உள்ளது. வீரர்களை தக்கவைத்துக்கொள்ள நவம்பர் 15ஆம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
முன்னதாக செப்டம்பர் மாதம் இந்தியன் பிரீமியர் லீக்கின் அடுத்த சீசனுக்கான பஞ்சாப் கிங்ஸின் புதிய தலைமை பயிற்சியாளராக ட்ரெவர் பெய்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் கிங்ஸ் அறிவித்தது. அவர் இங்கிலாந்தை 2019 ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்திற்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இரண்டு ஐபிஎல் பட்டங்களும் வாங்கியபோது பயிற்சியாளராக வழிநடத்தினார். அவரைத் தவிர, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாடின் மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் சார்ல் லாங்கேவெல்ட் ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் பயிற்சிக் குழுவில் இடம் பெறுகிறார்கள். பெய்லிஸுக்கு இவர்கள் உதவுவார்கள்.
𝐓𝐡𝐞 𝐒𝐡𝐢𝐤𝐡𝐚𝐫 𝐃𝐡𝐚𝐰𝐚𝐧 𝐞𝐫𝐚 𝐛𝐞𝐠𝐢𝐧𝐬! 👑#CaptainGabbar is elated, thankful, and ready to lead Punjab Kings! 🗣️#ShikharDhawan #SaddaPunjab #PunjabKings @SDhawan25 pic.twitter.com/CnvVBGx4rU
— Punjab Kings (@PunjabKingsIPL) November 4, 2022