இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் பல தொழில்களிலும் ஈடுபட்டு அந்த தொழில்களில் லாபத்தோடு இயங்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதன்படி வாழ்க்கைக்கு தேவையான மளிகை பொருட்கள் முதல் 5 ஜிநெட்வொர்க் வரை அவர் தொடாத துறையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் 650 சலூன் கடைகளை வைத்துள்ள பிரபலமான நிறுவனம் நேச்சுரல்ஸ். இதன், 49% பங்குகளை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இது பற்றி கருத்து தெரிவித்த நேச்சுரல்ஸ், பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. சலூன் தொழிலில் கைவைக்கும் ரிலையன்ஸ் செய்தி பேசுபொருளாக மாறியிருக்கிறது.