டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் பாதி மாசு வாகனங்களில் இருந்து வருகிறது என்பதால் முடிந்தால் தனியார் வாகனங்களை இயக்காமல் ஒத்துழைப்பு அளிக்குமாறு டெல்லி அரசு கேட்டுக் கொண்டது. மேலும் காற்று மாசுபாடு காரணமாக இன்று முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் அஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
முதன்மை வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும். ஐந்தாம் வகுப்பு முதல் வகுப்பறைக்கு வெளியே செயல்படுவதை நிறுத்துமாறு நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் ncr பிராந்தியத்தின் பல பகுதிகளில் காற்றின் தர குறியீடு 500-க்கும் அதிகமாக உள்ள சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.