Categories
தேசிய செய்திகள்

வேலை தேடும் இளைஞர்களே உஷார்…. இதை யாரும் நம்பாதீங்க…. NIC திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனிடையே தற்போது நாட்டின் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் வேலை வாய்ப்பின்மை விகிதத்தை குறைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வேலைவாய்ப்பின்மை சாதகமாக பயன்படுத்தி ஒரு சில மோசடி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன.  இது தொடர்பாக தேசிய தகவல் மையம் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது இந்திய அரசின் தொழில்நுட்ப குழுவாக இருக்கும் தேசிய தகவல் மையத்தின் பெயரில் வேலைவாய்ப்பு பற்றிய போலியான தகவல்கள் பரவி வருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார் பெறப்பட்டதும் NIC உடனடியாக அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டதாகவும் இது போன்ற செய்திகளை பெறும் போது பொதுமக்கள் உடனே  [email protected] மற்றும் https://cybercrime.gov.in  என்ற இணையதளத்தில் உடனே புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |