Categories
தேசிய செய்திகள்

பொட்டு வைக்காத பெண் செய்தியாளர்…. பேச மறுத்த சமூக ஆர்வலர்….. பெரும் சர்ச்சை….!!!

சமூக ஆர்வலர் சம்பாஜி பிடே மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் செய்தியாளர் ஒருவர் பொட்டு வைக்காததால் அவருக்கு பதில் அளிக்க மறுத்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பெண் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பெண் என்பவள் பாரத மாதாவுக்கு நிகரானவர். பொட்டு வைக்காமல் விதவைப் போல தோன்றக்கூடாது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது. இந்த நிலையில் சம்பாஜி பிடேவுக்கு மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணைய தலைவர் ரூபாலி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் ஒரு பெண்ணின் பெருமையையும் சமூகப் பெருமையும் இழிவு படுத்துவதாக இது உள்ளது. பொட்டு வைப்பது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |