Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டுக்கு வந்த மின்சார ரயில்…. துணிப்பையில் கிடைத்த பெண் குழந்தை…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

சென்னையில் இருந்து செங்கல்பட்டிற்கு நாள்தோறும் ஏராளமான ரயில்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு செங்கல்பட்டுக்கு சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் ஒன்று வந்துள்ளது. இந்த ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் அனைத்து பயணிகளும் இறங்கிய பிறகு ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் லதா ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு திடீரென குழந்தை சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெண் போலீஸ் லதா அந்த பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையை பார்த்துள்ளார்.

இதனையடுத்து அவர் அந்த பையை சோதனை செய்துள்ளார். அதில் ஒரு பெண் குழந்தை இருப்பதையும் கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் லதா சக போலீசாருக்கு இது பற்றி தெரியப்படுத்தியுள்ளார். உடனடியாக அவர்கள் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் கூறியதாவது “அந்த குழந்தை பிறந்து ஐந்து நாட்கள் மட்டுமே ஆகின்றது. மேலும் குழந்தை நலமாக இருக்கின்றது” என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல குழுமத்திடம் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரயிலில் குழந்தையை அனாதையாக விட்டுச் சென்ற தாய் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |