பிரிட்டனில் ராஜகுடும்பத்தில் எழுதப்படாத விதிமுறையை அனைத்து உறுப்பினர்களும் கடைபிடிக்கும் போது கேட் மிடில்டன் மீறியுள்ளார்.
பிரிட்டன் நாட்டில் ஸ்கார்பரோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலேயே தொடர்புடைய இந்த சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்துள்ளது. அத்துடன் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுடன் ஒரு நபர் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் மேலும் ஒரு எழுதப்படாத விதியை மீறியுள்ளார். அதாவது, குறித்த நபர் தடையைத் தாண்டி வேல்ஸ் இளவரசியை நெருங்கியதுடன் புகைப்படத்தின் போது கேட் மிடில்டனின் தோள் மீது கையை வைத்துள்ளார். முதலில் கேட் மிடில்டனை நெருங்கிய அந்த நபர், அவரது கவனத்தை ஈர்த்ததுடன், புகைப்படம் எடுக்க அனுமதி கோரினார். பின்னர் தனது கையை கேட் மிடில்டனின் தோள் மீது வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கேட் மிடில்டனும் தமது கையை அவர் தோள் மீது வைத்துள்ளார். இதுபோன்ற செயல்களுக்கு ராஜகுடும்பத்திற்கு என உத்தியோகப்பூர்வ விதிகள் ஏதும் இல்லை என்றாலும், ராஜகுடும்பத்து உறுப்பினர்களை சந்திக்கும் மக்கள் கை குலுக்குவதுடன் முடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் எவரும் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கூடாது என்று எழுதப்படாத விதிகள் கடைபிடிக்கப்படுகின்றது. ஆனால் பொதுவாக சமீப ஆண்டுகளில் குறித்த விதிகளை இளம் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் கடைபிடிப்பதில்லை என்றே கூறப்படுகிறது. சார்லஸ் மன்னராக பொறுப்புக்கு வந்த பின்னர், இந்த புகைப்படம் எடுத்துக்கொள்ளும் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
தற்போதைய வேல்ஸ் இளவரசியான கேட் மிடில்டனே முன்னர் பலமுறை இந்த விதிகளை மீறியுள்ளார். எலிசபெத் ராணியார் காலமான பின்னர், செப்டம்பர் 8-ஆம் தேதி ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் பெரும்பாலான நேரம் பொதுமக்களை சந்திக்கவே செலவிட்டனர். அப்போது கேட் மிடில்டன் பலருக்கும் முகம் மலர புகைப்படங்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு தொண்டு நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், கேட் மிடில்டன் தமது ஆதரவாளர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.