தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், ஈரோடு,கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தூத்துக்குடி, நெல்லை,குமரி மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Categories