Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “தலைவர் 170” படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு இணையும் மாஸ் நடிகர்கள்…. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு பிறகு ரஜினியின் 170 மற்றும் 171-வது திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் தலைவர் 170-வது படத்தை டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி இயக்கும் நிலையில், நவம்பர் 5-ஆம் தேதி படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து அரவிந்த்சாமி மற்றும் வடிவேலு போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அரவிந்த்சாமி ரஜினியுடன் இணைந்து தளபதி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு நடிகர் வடிவேலு ரஜினியுடன் இணைந்து சந்திரமுகி மற்றும் குசேலன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பல வருடங்களுக்குப் பிறகு ரஜினியின் படத்தில் அரவிந்த்சாமி மற்றும் வடிவேலு இணைவதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |