தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் இப்போது வாரிசு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல்பாடலான ரஞ்சிதமே இன்று வெளியாகிறது. வரும் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். வாரிசு திரைப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம் தாம் தளபதி 67.
இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் உச்சத்தில் உள்ள நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜயை போன்று, அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் இரண்டு நபர்களின் புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளது. இதில் ஒருவர் 90ஸ் காலக்கட்டத்தில் பார்த்த விஜய்யை போலவும், மற்றொருவர் மாஸ்டர் திரைப்படத்தில் பார்த்த விஜய் போன்றும் தெரிகிறார்கள்.