கதை திருட்டு விவகாரத்தில் இயக்குனர் அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தற்போது அட்லி இயக்கத்தில் ஷாரூக் கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அட்லி எடுத்து எடுத்து வரும் ஜவான் திரைப்படத்தின் கதையானது பேரரசு திரைப்படத்தின் கதை எனக் கூறி அவர் மீது ‘செவன்த் சேனல் மாணிக்கம்’ என்பவர் புகார் அளித்திருந்தார். அதாவது, பேரரசு திரைப்படத்தின் கதையை தற்போது அப்படியே ஜவான் என்ற பெயரில் இயக்குனர் அட்லி எடுத்து கொண்டிருப்பதாகவும், அவர் தனது கதையை உரிமையின்றி அனுமதியின்றி திருடி இருக்கிறார் என்று தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகத் துறை ஆகிய இடங்களில் புகார் மனுவையும் அளித்திருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து விசாரிப்பதற்காக வருகின்ற 9ஆம் தேதிக்கு முன்னதாக பதில்களை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்லியை பொருத்தவரை தற்போது ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பையில் இருக்கிறார். ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் கதையானது பேரரசின் திரைப்படத்தின் கதை ஒரே மாதிரியாக இருப்பதாகவும், இரண்டு அண்ணன் – தம்பி கதாபாத்திரத்தில் ஷாரூக் கான் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சென்னையில் படத்தின் படபிடிப்பு நடைபெற்றது. அப்போது திரைப்படம் எந்த மாதிரியான கதை என்ற தகவல்களை வெளியானது. அதன் அடிப்படையில் இந்த புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கு முன்பாகவே அட்லீ எடுத்திருந்த ராஜா ராணி மற்றும் மெர்சல் ஆகிய திரைப்படங்கள் மூன்று முகம் மௌனராகம் ஆகிய படத்தின் படத்தை தழுவி இந்த காலத்திற்கு மாற்றி எடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இந்த நிலையில் தற்போது இந்திக்கு சென்றிருக்கக் கூடிய அட்லி ஜவான் திரைப்படத்தையும் இதே போல திருடி எழுதியுள்ளதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.