Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#HappyBirthdayViratKohli : கிங் கோலியின் 34ஆவது பிறந்தநாள்…. “கேக் வெட்டி கொண்டாட்டம்”…. குவியும் வாழ்த்துக்கள்.!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நவம்பர் 5, 2022 அன்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இன்றோடு 34 வயதாகிறது, இந்திய பேட்டிங் ஐகான் விராட் கோலி இன்று நவம்பர் 5ம் தேதி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 477 சர்வதேச போட்டிகள் மற்றும் 24,350 ரன்களுடன், இந்திய ரன் மெஷின் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நாளை அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

தற்போது டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் சிறந்த பேட்டராக திகழும் கோலிக்கு இந்த ஆண்டின் தொடக்கம் சரியாக அமையவில்லை. ஃபார்ம் இல்லாமல், கோலி கடந்த சில மாதங்களாக கஷ்டப்பட்டார் மற்றும் அவர் மீதுவிமர்சனமும் எழுந்தது. இதனைத்தொடர்ந்து அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 2022 ஆசிய கோப்பையில் சதம் அடித்து கம் பேக் கொடுத்தார். இது கோலிக்கு சர்வதேச டி20 போட்டியின் முதல் சதமாகும்.

அன்றிலிருந்து கோலி தனது பார்மைதொடர்ந்து வருகிறார், குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் அசத்தி வருகிறார். இந்த டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களும் விராட் கோலி தான் அடித்துள்ளார்.. பாகிஸ்தானுக்கு எதிராக கோலி அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற செய்தது மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.

கோலி, 2011 ஐசிசி உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் இருந்துள்ளார். சமீபத்தில் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆனார்.அடிலெய்டில் வங்கதேச அணிக்கு எதிரான இந்தியாவின் முக்கியமான குரூப் 2, சூப்பர் 12 மோதலின் போது கோலி இந்த மைல்கல்லை எட்டினார், இதில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 44 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார் இந்திய ரன் இயந்திரம் கோலி. இன்னிங்ஸின் போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 145.45 ஆக இருந்தது. வலது கை வீரர் இப்போது 25 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 1,065 ரன்கள் எடுத்துள்ளார், சராசரியாக 88.75. அவர் 13 அரை சதங்களை அடித்துள்ளார். கோலி 71 சர்வதேச சதங்களை (டெஸ்டில் 27, ஒருநாள் போட்டிகளில் 43 மற்றும் டி20யில் 1) அடித்துள்ளார்.

முன்னாள் டீம் இந்தியா கேப்டன் விராட் கோலி & சிறந்த நவீன கால பேட்டர்களில் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பிசிசிஐ விராட் கோலிக்கு கேக் வெட்டும் வீடியோவையும் பதிவிட்டுள்ளது. இந்திய வீரர்கள் அனைவரும் சுற்றிநின்று கைதட்டி வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

அதேபோல கோலியின் பிறந்தநாளுக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஏபிடி வில்லியர்ஸ், இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக, உமேஷ் யாதவ், யுவராஜ் சிங், ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயஸ் ஐயர், ஹர்பஜன் சிங், தினேஷ் கார்த்திக், சச்சின் பேபி, கொல்கத்தா அணி நிர்வாகம், சுரேஷ் ரெய்னா, வினய் குமார், பாக் வீரர் ஷாநவாஸ் தஹானி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மயங் அகர்வால் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

 

Categories

Tech |