Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட “ஸ்டீல் சுரங்கப்பாதை தகர்ப்பு”…. வெளியான தகவல்….!!!!

எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை அகற்றப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸ் தலைமையகத்துக்கு அருகில் உள்ள ஜாக்  நார்த்ரோப் அவென்யூவில்  ஒரு மைல் நீளமும், 12 அடி அகலமும் கொண்ட ஸ்டீல் சுரங்கப்பாதை எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், மாசு, செலவு போன்ற காரணங்களால் போக்குவரத்து என்பது எரிச்சலூட்டுவதாகவும், நேரத்தை கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில் பேருந்துகள், கார்கள், ரயில், விமானம் போன்றவற்றைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் உந்துவிசையை அடிப்படையாகக் கொண்ட அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வாகனத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எலான்  மஸ்க்கின் தீ போரிங்  நிறுவனம் இதற்கான சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இது குறித்து பல சோதனைகளும் நடத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை. இந்த நிலையில் சுரங்கப்பாதை முழுவதையும் அகற்றி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த இடம் இனி வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |