Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க புதிய வசதி…. அரசு அதிரடி….!!!!

ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அப்படி செய்தால் மட்டுமே பென்ஷன் முறையாக வந்து சேரும். இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பிப்பதில் இருக்கும் சிக்கலை தவிர்க்கும் விதமாக ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக சென்னை துறைமுக ஆணையம் புதிய ஏற்பாடை செய்துள்ளது.

அதன்படி ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஆயுள் சான்றிதழை கணினி மூலமாக மின்னணு முறையில் பதிவு செய்யலாம். அதற்காக www.jeevanpraman.gov.in  என்ற இணையதளத்தில் Locate a centre என்பதை கிளிக் செய்து உங்கள் பகுதியின் பின்கோடு பதிவிட வேண்டும் .

உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள அங்கீகாரம் பெற்ற மையங்களில் தங்களின் ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் சென்ற மின்னணு ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அடுத்ததாக ஆயுள் சான்றிதழை விரைவு தபால் அல்லது கொரியர் சேவை மூலமாகவும் அனுப்பலாம்.

மேலும் ஆயுள் சான்றிதழ் படிவத்தை சென்னை துறைமுக ஆணையத்தின் இணையதளமான என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொண்டு தங்களின் புகைப்படத்தின் மீது தங்கள் ஓய்வூதிய தொகை பெறக்கூடிய வங்கி மேலாளரிடம் உண்மை சான்றிதழாக கையெழுத்து பெற வேண்டும். பின்னர் வங்கி மேலாளரின் பெயர், பதவியின் பெயர் மற்றும் அலுவலக முத்திரை கட்டாயம் பெற வேண்டும். இவற்றை படிவத்துடன் சேர்த்து கூரியர் சேவை அல்லது விரைவு தபால் மூலமாக சென்னை துறைமுக ஆணையத்திற்கு டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பலாம்.ஆயுள் சான்றிதழை நேரடியாக செலுத்தும் முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த முறை அமலுக்கு வந்தது.

Categories

Tech |