விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா ரோகித்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்ட நிலையில் உள்ளது. வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ள திட்டம் போட்டு மண்டபத்திலிருந்து தப்பித்து கோவிலுக்கு செல்கின்றார். இந்த விஷயத்தை அறிந்து கோவிலுக்கு வரும் கண்ணம்மா, பாரதி வெண்பா திருமணத்தை நிறுத்திவிடுகின்றார். அதன் பின்னர் வெண்பா மற்றும் ரோகித் திருமணம் எபிசோட்டில் நடந்துள்ளது. வெண்பா தாலி கட்டிக்கொள்ள மறுத்தார் சர்மிளா அவரை விடாமல் கட்டாயப்படுத்தி திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
இதனை அடுத்து சர்மிளா தனது சொத்துக்கள் அனைத்தையும் உயிர் எழுதியுள்ளதாக கூறியுள்ளார். அதாவது சொத்தில் 60% மாப்பிள்ளை ரோஹித்துக்கு எழுதி வைத்துள்ளேன் என்று கூறினார். அதன் பின்னர் சர்மிளா ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அதாவது வெண்பா டைவர்ஸ் வாங்கினால் மொத்த சொத்தும் ரோஹித்துக்கு சென்றுவிடும் என்று அவர் உயிர் எழுதியதை சொன்னதும் வெண்பா கடும் அதிர்ச்சியில் உள்ளார். எப்படியோ ஒருவழியாக வெண்பாவின் திருமணமும் நடந்து முடிந்தது. அதனால் அடுத்து பாரதிக்கு டிஎன்ஏ ரிப்போர்ட் கிடைத்து அவர் தனது தவறை உணர்ந்துவிட்டால் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.