Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடா ? வேல்முருகன் பேட்டி …!!

ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடந்ததாக தமிழகர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வான TNPSC முறைகேடு தமிழகத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியது. குரூப் 4 , குரூப் 2ஏ , VAO போன்ற தேர்வில் முறைகேடு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறைகேட்டு புகாரை தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக சர்சைகள் எழுந்தது.

அந்த சர்சை ஆசிரியர் தகுதி தேர்வையும் விட்டுவைக்கவில்லை.  இதையடுத்து சிக்கியத்துய  ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு என எழுந்த புகார் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய இவர் , 2013ல் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 70 ஆயிரம் பேரில் இதுவரை யாரையும் நியமிக்கவில்லை. இரண்டாவது முறை நடந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 19 ஆயிரத்து 261 பேர் விவரத்தை வெளியிடவில்லை என்று வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |