Categories
தேசிய செய்திகள்

அவதூறு பேச்சு விவகாரம்… நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்…!!!!!

கடந்த அக்டோபர் 26ம் தேதி சென்னை கே.கே நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி, ரகுராம் போன்றோரை பற்றி அவதூறாக பேசியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் காணொளி பரவிய நிலையில் திமுக எம்பி கனிமொழியும் வருத்தம் தெரிவித்து இருந்தார். மேலும் பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் நதியா சீனிவாசன் தலைமையில் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே திமுக பிரமுகரின் சைதை சாகிக்கின் சர்ச்சை கூறிய பேச்சு பற்றியும் அவர் மீது நடவடிக்கையை எடுக்க கோரி தேசிய மகளிர் ஆணையர் ரேகா சர்மாவை கடந்த வெள்ளிக்கிழமை தில்லியில் நேரில் சந்தித்து நடிகை குஷ்பூ புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதனை அடுத்து குஷ்பூ செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக பிரமுகர் சாதிக் அந்த நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகிகளை அவதூறாக பேசும்போது மேடையில் அமைச்சரும் இருந்துள்ளார். அமைச்சர் அதை பற்றி தட்டி கேட்கவில்லை.

இதனை அடுத்து நான்கு நாட்களுக்கு பின் அந்த நிர்வாகி அழைத்து கேட்டிருக்கின்றார். பொதுமக்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் அனைவரின் முன்பாக பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதை ரசித்து கேட்டு விட்டு தனிப்பட்ட முறையில் கண்டித்ததாக அமைச்சர் தெரிவிக்கின்றார். இதனால் இந்த பிரச்சனை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையர் ரேகா சர்மாவிடம் சம்பந்தப்பட்ட திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் சைதை சாகிப் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்படும் என தேசிய மகளிர் ஆணைய ரேகா ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |