Categories
தேசிய செய்திகள்

பாங்க் ஆப் பரோடா வங்கியின் புதிய திட்டம்…. 399 நாட்களுக்கு 7.5% வட்டி….. விருப்பமுள்ளவர்கள் சேரலாம்…..!!!!!

இந்தியாவில் வங்கிகள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக குறைந்த முதலீடு அதிக லாபம் இருக்கும் திட்டத்தை பலரும் விரும்புவர். இந்நிலையில் பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா ஒரு புதிய திட்டத்தை வாடிக்கையாளர்களுக்காக தற்போது தொடங்கியுள்ளது. அதாவது திரங்கா பிளஸ் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் பருவ காலம் 399 நாட்களாகும். இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு வருடத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படும்.

இந்த வட்டி விகிதத்தில் இருந்து 0.50 சதவீதம் கூடுதலாக சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டி வழங்கப்படும். அதன்பிறகு திரும்ப பெற முடியாத வைப்பு நிதிகளுக்கு 0.25 சதவீதம் வட்டி வழங்கப்படும். இந்நிலையில் வங்கியின் செயல் இயக்குனர் அஜய் கே. குரானா வாடிக்கையாளர் களுக்கான பல்வேறு திட்டங்களில் வட்டி விகிதம் அதிகரித்து வருவதன் காரணமாக புதிதாக வைப்பு நிதி மூலமாக வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் த்ரங்கா பிளஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று கூறியுள்ள.

Categories

Tech |