உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை மத்திய கல்வி அமைச்சகம் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்துவதற்கு உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கான்பூர் ஐஐடி நிர்வாகிகள் வாரிய தலைவரும் ஐஐடி கவுன்சில் நிலை குழு தலைவருமான கே ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த உயர்நிலைக் குழுவில் அசாம் மகாபுருஷ் ஸ்ரீமத் சங்கர தேவா விஸ்வ வித்யாலயா, துணைவேந்தர் ம்ர்துல் ஹஜாரிகா லக்னெள ஐஐஎம் பேராசிரியர் பாரத் பாஸ்கர், மத்திய கல்வி அமைச்சக உயர்கல்வித்துறை இணை செயலாளர் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் இது பற்றி மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் பேசும் போது, உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஆய்வு மற்றும் அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்துதல் மற்றும் தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற தேசிய அங்கீகார கவுன்சிலுக்கான நடைமுறைகளை வகுப்பதற்கு இந்த உயர்நிலை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆய்வை பொருத்தமட்டில் உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் அங்கீகாரம் என்பது உயர் கல்வி நிறுவனங்கள் அவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது. மேலும் இந்த ஆய்வு மற்றும் அங்கீகார தரநிலை மூலமாக உயர் கல்வி நிறுவனங்கள் பற்றிய நம்பகமான தகவல்கள் மற்றும் கல்வி தரம் பற்றிய விவரங்களை மாணவர்களும் ஊழியர்களும் சமூகமும் தெரிந்து கொள்ள முடியும் என கூறியுள்ளார்.