Categories
மாநில செய்திகள்

வெள்ள நீர் தடுப்பு பணிகள் … சென்னை 98 % இயல்பு நிலைக்கு திரும்பியது… அமைச்சர் சேகர்பாபு பேச்சு…!!!!

சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டதால் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று 200 வார்டுகளில் பருவ கால மருத்துவ முகாம் நடைபெறுகின்றது. திருவிக நகர் மண்டலத்தில் அமைச்சர் சேகர்பாபு இதனை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கி விடப்பட்டதால் சென்னையில் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழிவு நீரை அகற்றுவது மட்டுமல்லாமல் மருத்துவ முகாம்களை நடத்த முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் சென்னையில் இன்று பெருநகர மாநகராட்சியுடன் சுகாதாரத் துறையும் இணைந்து 200 வார்டுகளில் மழைக்கால மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

மேலும் சென்னையில் 156 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 44 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிந்ததால் அடுத்த வருடம் பருவ மழைக்கு பிரச்சனை வராது. பருவமழை முடிந்தவுடன் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும். மேலும் சென்னையில் நேற்று விபத்துக்குள்ளான பாழடைந்த கட்டிடம் பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது அது பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |