தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வம்சி தற்போது தளபதி விஜயை வைத்து வாரிசு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு தமன் இசையமைக்க சமீபத்தில் ரஞ்சிதமே என்ற பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஞ்சிதமே என்று தொடங்கும் அப்பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் இன்று ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.