தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதனைத் தொடர்ந்து வாரிசு படத்தில் முதல் பாடலின் ப்ரோமோ படக் குழுவால் கடந்த 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 30 வினாடி அளவில் ப்ரோமோ பாடல் வெளியானது. இந்நிலையில் “ரஞ்சிதமே ரஞ்சிதமே” என தொடங்கும் முழு பாடல் இன்று வெளியாகி உள்ளது. இந்த பாடலை விஜய் மற்றும் மானசி எம்.எம் இணைந்து பாடியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலில் எப்போதும் போல விஜய் செமையான நடனத்தை கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. மேலும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.